டெல்லி: தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவருகிறது. இதற்கு எதிராக சிலர் நீதிமன்றங்களின் கதவை தொடர்ந்து தட்டி வருகின்றனர். இவர்களுக்கு துணையாக பிரபல அரசியல் கட்சிகளின் வழக்கறிஞர்களும் துணைபோகன்றனர். இந்த நிலையில், தமிழக்ததைச் சேர்ந்த காயத்ரி, சஞ்சனா, அகிலா, அன்னப்பூரணி உள்ளிட்ட சில மாணவிகள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 50 சதவீதத்துகு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆ னால், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று வாதாடியதுடன், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என இடைக்கால மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 69% இட ஒதுக்கீட்டு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என்று உத்தரவிட்டதுடன், மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை இந்த 69% இட ஒதுக்கீடு வழக்கு விசாரணையிலிருந்து நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.
குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டுவருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்திற்கு மட்டும் தான் சிறப்பு அதிகாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் மனுதாரர் தரப்பில், தமிழகத்துக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடி வருகிறார். இந்த விஷயத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியோ, இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் எந்தவொரு தமிழக அரசியல் கட்சியும் குரல் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில், தமிழகஅரசுக்கு எதிராக ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் வாதாடி, தமிழகத்திற்கு துரோகம் செய்தாரோ, அதுபோல, தற்போது காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளார்.