சென்னை,
டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த கோரி தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஒய்வு பெற்ற நிலையில், அவரை மேலும் 2 ஆண்டுகளுக்கு தமிழக அரசு நியமனம் செய்தது.
இந்த நியமனம் சட்ட விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. டிஜிபி நியமனம் தொடர்பாக 2006ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்த உச்சநீதி மன்றம் அதன்படி டிஜிபி நியமனம் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி, பதவி மூப்பின் அடிப்படையில் டிஜிபியாக பதவிக்கு தகுதியான 5 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். அவர்களில் 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுக்கும். அந்த மூவரில் ஒருவர் டிஜிபியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஆனால், தமிழக அரசு உச்சநீதி மன்றத்தின் சீர்த்திருங்களை கண்டுகொள்ளாமல், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 30ந்தேதி, தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனை மீண்டும் நியமனம் செய்து அறிவித்தது. அதன்படி அவரது பதவிக்காலம் 2019ம் ஆண்டு ஜூன் 30ந்தேதி நீட்டிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில், டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த கோரி மனு செய்யப்பட்டது. இந்த மனுவை தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தாக்கல் செய்திருந்தன. வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து