டெல்லி:
ச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக  நாளை தீர்ப்பு வழங்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணைமுதல்வர் சச்சினுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மாநில அரசு ஆட்டம் கண்டுள்ளது. இதற்கிடையில், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி, காங்கிரஸ் தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சட்டப்பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷியிடம் காங்கிரஸ் கொறடா புகாா் கொடுத்தாா்.
அதையடுத்து, ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர்,  சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு, விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பிய இருந்தார். இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில், சச்சின் பைலட் மீது  நடவடிக்கை எடுக்க வரும் 24ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டது.  24-ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.  அதுவரை அவா்கள் மீதான நடவடிக்கையை பேரவைத் தலைவா் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த நிலையில்,  மாநிலத்தில் தற்போதைய அரசியல் சூழல், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நெருக்கடியாக உள்ளது. எனவே, அரசமைப்பு சாா்ந்த நெருக்கடி வருவதற்குள்,  அரசமைப்புச் சட்டத்தின்படி பணியாற்றுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தரும் வகையில் உச்சநீதி மன்றத்தில் பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி மனுத்தாக்கல் செய்தார்.
இதற்கிடையில்,  மாநில சட்டப்பேரவைத் தலைவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடா்பாக தனது தரப்பு கருத்தை கேட்காமல் தீா்ப்பு அளிக்கக் கூடாது என்றும், வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைக்கக் கோரியும் மாநில முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அருண்மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. ராஜஸ்தான் சபாநாயகரின் தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனு மீது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ராஜஸ்தான் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறிய உச்சநீதி மன்றம்,  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டிருக்கும் என்றும் உத்தரவிட்டது.
சச்சின் பைலட் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் உத்தரவு