டில்லி,
உச்சநீதி மன்ற நீதிபதிகள் மே1ந்தேதி தனது முன் ஆஜராக வேண்டும் என்று கூறிய நீதிபதி கர்ணனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மன நலம் தொடர்பான மருத்துவ சோதனை நடத்தவும் உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தன்னுடன் பணியாற்றிய சக நீதிபதிகள் ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்று மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் கல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவர்மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததுடன், வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதையடுத்து கோர்ட்டில் ஆஜரானார். அதைத்தொடர்ந்து, மேலும், தான் தலித் என்பதால் தன் மீது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து எசுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சுக்கு நீதிபதி கர்ணன் எழுதிய கடிததத்தில் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும், பொது மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதற்காகவும் இழப்பீடாக ரூ.14 கோடி தர வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகள் 28-ந்தேதி (நேற்று) தன் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார் ஆனால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரணைக்கு ஆஜராகாத தால் அவர்கள் மீண்டும் வருகிற 1-ந்தேதி ஆஜராக வேண்டும். அத்துடன் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளும் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
8 நீதிபதிகள் மீதான புகார்கள் மிகவும் மோசமானது. சாதிய ரீதியிலானது, இது சட்டப்படி தண்டனைக்குரியது என்றும் நீதிபதி கர்ணன் தனது உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், நீதிபதி கர்ணனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த அதிரடி உத்தரவிட்டுள்ளனர். வரும் 5 ம் தேதி இந்த சோதனையை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.