டில்லி,

மிழகத்தில் விவசாயிகள் தற்கொலை குறித்து 4 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகள் மரணம் தொடர்கிறது.   உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை எனறும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு  சுப்ரீம் கோர்ட்டில்  தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம், மனு தாக்கல் செய்திருந்தது.

இதற்கு கடந்த ஏப்ரல் 28 அன்று  பதிலளித்த தமிழக அரசு,  தமிழகத்தில் கடந்த ஆண்டு 82 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்துகொண்டுள்ளனர் இவர்களில் யாரும் வறட்சி காரணமாக தற்கொலை செய்யவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு,, விவசாயிகள் பிரச்சினையில்  தமிழக அரசு  அக்கறை காட்டவில்லை என்றும்,  இந்த பிரச்சினையில்  தமிழக அரசு மெத்தன போக்கை கடைப்பிடிக்கக் கூடாது; மாநில அரசின் அணுகுமுறை சரியலல அல்ல. விவசாயிகளின் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது  விவசாயிகளின் தற்கொலையை தடுக்க, தமிழக அரசு புதிய வழிகளை உருவாக்குவது குறித்து, நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக 4 வாரத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.