டில்லி,
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை வழங்கி உள்ளது.
இன்று இரவுக்குள் கடைகளை அகற்ற வேண்டும் என்றும், நாளை முதல் கடைகள் செயல்படக்கூடாது என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு மற்றும், ஏராளமான விபத்து ஏற்படுவதை கருத்தில் கொண்டு நாடு முழு வதும் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் மதுபானக் கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் ஆஜரான மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, 500 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை 100 மீட்டராக குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உச்சநீதி மன்றத்தின் உத்தரவு காரணமாக தமிழகத்தில் 1,731 மதுக்கடைகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மது விற்பனை, வரி மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் ரூ.25,500 கோடி வருமானம் கிடைப்பதாகவும், உச்சநீதி மன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டால், தமிழகத்தின் வருமானம் பாதிக்கும் என்றும் வாதிட்டது.
மேலும் இது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், மாநில அரசு வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழிகளை கண்டறிய வேண்டும், மதுக்கடைகளை மட்டுமே நம்பியிருக்க கூடாது என்றும்,
மாநில அரசுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக பொதுமக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா? என்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஏற்கனவே உச்சநீதி மன்றம் அளித்த உத்தரவுபடி இன்றே கடைசி நாள். டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள். தமிழகத்தில் மொத்தம் 6323 டாஸ்மாக் மது கடைகளில். சுமார் 3321 டாஸ்மாக் கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கின்றன அவற்றை இன்றோடு மூட அதிரடி உத்தர விட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம். தமிழகத்தில் அரசே மதுக்கடைகள் நடத்துவதால் கால அவகாசம் வழங்க முடியாது உத்தரவிட்டனர்.