டெல்லி: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்தியஅரசு பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் கடுமையாகவும் சாடியது.
நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு இரு வேறு விலை எதற்கு என்று கேள்வி எழுப்பியதுடன், ஒரே விலை இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசிகள் கொள்முதல் மற்றும் கோவின் பயன்பாட்டில் கட்டாய பதிவு குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்ட முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 3-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 4வது கட்டமாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஆனால், நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி வழங்கியதால்தான், நமது நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறத.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவல், அதை தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சூமோட்டோ வழக்காக விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், இன்றைய விசாரணையின்போது, தடுப்பூசி விவகாரத்தை கையிலெடுத்தது.
விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நாடுமுழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்றும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை கொண்டே திட்டம் நிறைவேற்றப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘‘44 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசு த வாங்கி மாநிலங்களுக்கு விநியோகம் செய்கிறது. ஆனால், 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு போடப்படும் தடுப்பூசியில் 50 சதவீதத்தை மத்திய அரசு வாங்கி விநியோகிக்கிறது. மீதி 50 சதவீதத்தை தனியார் மருத்தவுமனைகள் வசம் ஒப்படைத்து விட்டது.
இந்திய அரசு தடுப்பூசிகளை வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் மாநிலங்கள் தடுமாற்றத்தில் விடப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் கொள்முதலுக்கு அரசு விலை நிர்ணயம் செய்கிறது. நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு இரு வேறு விலை எதற்கு என்று கேள்வி எழுப்பியதுடன், ஒரே விலை இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசிகள் கொள்முதல் மற்றும் கோவின் பயன்பாட்டில் கட்டாய பதிவு குறித்து விளக்கமளிக்கவும் , தடுப்பூசி ப ற்றாக்குறை தொடர்பாகவும் ஏராளமான புகார்கள் தொடர்ந்து தகவல்கள் வருகின்றன என தெரிவித்தது.
கொரோனா தடுப்பூசி தொடர்பாக எழுந்துள்ள குளறுபடிகளை போக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தடுப்பூசி தொடர்பான கொள்கை முடிவுகள் அடங்கிய பிரமாண பத்திரத்தை 2 வாரங்களில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கியது. மேலும், நாடுமுழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டது.