
டில்லி:
டி.டி.டி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது
சமீபத்தில் டில்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இதை எதிர்த்து ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.,மதுசூதனன் ஆகியோர் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டி.டி.டி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது
ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். தரப்பில், “ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாகத்தான் போட்டியிட்டார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை எப்படி கட்சிக்கான சின்னமாக ஒதுக்கமுடியும்? தவிர தினகரன் கட்சி துவங்கும் முன்பே குக்கர் சின்னத்தை ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியாகாது”என்ற வாதம் வைக்கப்பட்டது.
தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தினகரனுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அதே நேரம், “மூன்று வார காலத்துக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தீர்மானிக்க வேண்டும்” என்று டில்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]