டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு  17 மாத சிறைக்கு பிறகு, இன்று உச்சநீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டு ள்ளது.

டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவிற்கு  உச்சநீதி மன்றம் இன்று  நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது. அவர்  டெல்லியில் இருப்பதைக் குறிக்க ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் தோறும் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்று நிபநததனை விதித்துள்ளது.

 

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த 2023ம்  ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.அவரது ஜாமீன் மனுக்கள் கீழமை கோர்ட்டுகளில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டதால் கடந்த 17 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஜாமின் கோரி ச்சநிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதாக பல கட்ட விசாரணைகளை நடத்திய உச்சநீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது,   மணிஷ் சிசோடியா கட்சி அலுவலகம் செல்லக் கூடாது என்று அமலாக்கத்துறை கோரிய நிலையில், அதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறித்து கூறிய டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சவுரப் பரத்வாஜ் , “இது ஒரு பெரிய நாள், நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் இன்று கூறிய தீர்ப்பு  ஒரு மைல் கல்லாக இருக்கும்… எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. அதை நிரூபிக்காமல் 17 மாதங்கள் அவரை சிறையில் அடைத்துள்ளது மத்திய அரசு மனீஷ் சிசோடியாவின் 17 மாத காலத்தை அவரது குடும்பத்தினருக்கு திருப்பித் தர முடியுமா?