டெல்லி: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதுரை அமலாக்கத்துறை அலுவலக அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை, மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் அங்கித் திவாரி பல முறை ஜாமின் கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்து வந்தார். அவரது ஜாமின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.
இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அங்கித் திவாரி சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த, உயர்நீதிமன்றம், து அங்கித் திவாரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்திலேயே நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறி அவரது ஜாமீன் தொடர்பான சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், அங்கித்திவாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, அங்கித் திராவாரிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
அதன்படி, அங்கித் திவாரி, எந்த அதிகாரிகளையும், சாட்சிகளையும் தொடர்பு கொள்ளக் கூடாது; ஆதாரங்களை சிதைக்கக் கூடாது, மாநில அரசின் அனுமதியின்றி தமிழகத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று கூறியதுடன், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.