டெல்லி:  உச்சநீதி மன்றம் தேர்தல் பத்திரம் முறைக்கு தடை விதித்துள்ள நிலையில்,  தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரி தொடரப்பட்ட மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துஉத்தரவிட்டது.

அரசியல் கட்சிகள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியை அரசே பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை  தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த 2024ம் ஆண்டு  உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை,  எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்க்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் 2024 மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி  2024  மார்ச் 12ந்தேதி அன்று  சமர்பித்துள்ளது. எஸ்பிஐ வங்கி சமர்பித்த தரவுகளை வரும் 15ஆம் தேதி, மாலை 5 மணிக்குள்  இணையத்தளத்தில் பதிவேற்றியது. இதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற வருமானம்  16,518 கோடி என்பது தெரிய வந்தது. இந்தியாவில் அதிக நிதி பெற்றது பாஜக என்பதும், தமிழ்நாட்டில் அதிக நிதி பெற்றதும் திமுக என்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில்,  தேர்தல்  பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற 16,518 கோடி ரூபாயை பறிமுதல் செய்ய உத்தரவிடும் வகையில் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என  சமூக ஆர்வலர் கெம் சிங் பதி என்பவர் மனு தாக்கல் செய்திரந்ததார். இந்த மறுஆய்வு மனு   தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இது தொடர்பான நிலுவையில் மனு ஏதும் இருந்தால் அவைகளும் தள்ளுபடி செய்யப்படும்” எனத் தெரிவித்தனர்.