டெல்லியைச் சேர்ந்த நமா என்பவர் உச்ச நீதிமன்றத்தில், இந்தியா என நமது நாட்டின் பெயரை பாரத் என மாற்றக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், இந்தியா என்ற ஆங்கில பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும்,
பாரத் அல்லது இந்துஸ்தானுக்கு பதிலாக இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் அடிமைத்தனத்தின் அடையாளத்தை அகற்றுவதில் மையத்தின் தோல்வி தான் நடவடிக்கைக்கான காரணங்கள் என்றும், கடந்த காயத்தின் தன்மை வெளிநாட்டு ஆட்சியிலிருந்து கடுமையாக வென்ற சுதந்திரத்தின் வாரிசுகளாக அடையாளத்தையும் நெறிமுறைகளையும் இழப்பதாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், நாட்டின் பெயர்கள் ஆதார் அட்டையில் ‘பாரத் சர்க்கார்’ என்று இருப்பதாகவும், ஓட்டுநர் உரிமத்தியல் ‘யூனியன் ஆஃப் இந்தியா’, பாஸ்போர்ட்டுகளில் ‘இந்திய குடியரசு’ என பல்வேறு பெயர்களில் உள்ளது. இது குழப்பத்தை உருவாக்குகிறது. ஆகவே தேசனத்தின் பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.