சென்னை:
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு தலைவராக பொன்மாணிக்க வேலை சென்னை உயர்நீதி மன்றம் நியமனம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத் தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், காவலர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுவையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்றுள்ள சிலை கடத்தல் தொடர்பான விசாரணையை ஐ.ஜி.பொன் மாணிக்க வேல் நடத்தி வந்த நிலையில், அவர் பணி ஓய்வு பெற்ற பிறகும், ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், பல்வேறு நிபந்தனைகளுடன் பொன்மாணிக்க வேல் தொடரலாம் என்று கூறி, தமிழக அரசின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
அதேவேளையில், மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 66 போலீசார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையின் வாத பிரதிவாதங்கள் முடிந்த நிலையில்,இன்று உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்து. அதில், காவல்துறை அதிகாரிகளின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.