இனிமேல், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்கள் பதவிகளை நிரப்ப வேண்டும், அதாவது தற்போது நடைமுறையில் உள்ள 3 தேர்தல் ஆணையர்களையும், இதன்படிதான் தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவின் அரசு தலையீடு இன்று சுதந்திரமாக செயல்படும் அமைப்புகளின் முதன்மையானதாக இருப்பது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற தேர்தல், மாநில தேர்தல்களை நடத்துவதும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையமே.
ஆனால், இது போன்ற நியமனங்களை செய்வதில், இந்தியாவை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் மகத்தான இடத்தில் இருக்கிறது.
தேர்தல் ஆணையம். தற்போது தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருப்பவர் அருண் கோயல்/ அவர் தான வகித்து வந்த மத்தியஅரசின் பதவி வேண்டாம் என்று விஆர்எஸ் கொடுத்த மறுநாளே தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டது சர்ச்சைசையை எற்படுத்தியது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்தியஅரசின் நடவடிக்கையை கடுமையாக சாடியிருந்தனர். ஆனால், மத்தியஅரசின் தரப்பில், தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் தலையிட முடியாது (Hold Mouth) என்று கூறி இதனை விரிவாக அலச வேண்டும் என்றார்.
இந்த வழக்கின் காரசாரமான விசாரணைகளைத் தொடர்ந்து, தற்போது உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
இனிமேல், தேர்தல் ஆணையர் பதவிகளை மத்தியில் ஆளும் அரசு தன்னிச்சையாக நியமனம் செய்யக்கூடாது. இதுபோன்ற உயர் பதவி களுக்கு நியமனம் செய்ய, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அவர்களின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்கள் பதவிகளை நிரப்ப வேண்டும், அதாவது தற்போது நடைமுறையில் உள்ள 3 தேர்தல் ஆணையர்களையும், இதன்படிதான் தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
மேலும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு எந்தவொரு கட்சியும் தகுதிபெறவில்லை என்றால், அதிக நாடாளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட கட்சியின் தலைவரை குழுவில் இணைத்து, தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக மத்தியஅரசு முறையாக சட்டம் இயற்றும் வரை இந்தக் குழு செயல்படும் என்று அறிவித்துள்ளது.