சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 பேரை கடந்த 2022ஆம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. அதில் 4 பேரை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, எஸ்.செளந்தர் மற்றும் ஜான் சத்யன் ஆகியோரை நிராகரித்தது.

இந்த நிராகரிப்புக்குக் காரணமாக சில தகவல்கள் அப்போது வெளியாகின. பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் கட்டுரையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும், மருத்துவ மாணவி “அனிதா உயிரிழப்பு இந்தியாவிற்கான அவமானம், அரசியல் துரோகம்” எனக் குறிப்பிட்டதாக உளவுத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குரைஞர் ஜான் சத்யனின் பெயர் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.