டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத் துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பொறுப்பு நீதிபதியாக, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.துரைசாமி நியமிக்கப்பட்டார். சுமார் இரு மாத காலமாக அவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதரனை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ள நிலையில், அவருக்கு மத்தியஅரசு அனுமதி வழங்காமல் உள்ளதால், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.