சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்கள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடுஅரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நிலுவை யில் இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என கூறியுள்ள உச்ச்நீதிமன்றம், அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி உத்தரவை ரத்து செய்ததுடன், உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி, குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்த மசோதாக்கள் உடனடியாக சட்டமாகஅமலுக்கு வந்துள்ளன.
ஏற்கனவே இதுதொடர்பான வழக்கின் விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள்,, மிகவும் அவசியமான விவகாரங்களில் ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது. தனது அதிகாரத்தையும் பொறுப்பையும் ஆளுநர் துஷ்பிரயேகம் செய்கிறார் என்பதாக மாறுகிறது என்றும், தமிழக மக்களின் உரிமைகளை ஆளுநர் பறிக்கிறார். ஆளுநரின் செயலற்ற தன்மை மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையே முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி உள்ளது. அத்துடன், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஆளுநர் தடையாக இருக்கிறார். சிபிஐ விசாரணை உள்ளிட்டவற்றிற்கு உத்தரவிட மறுக்கிறார் என்று குற்றம் சாட்டி உள்ளதுடன், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன பரிந்துரையை முறையான விளக்கமின்றி நிராகரித்திருக் கிறார், ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் மெத்தன போக்கை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது எனப்தையும் சுட்டிக்காட்டியது.
ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் எப்போது தாக்கல் செய்யப்பட்டது என்றும் எவ்வளவு நாட்கள் நிலுவையில் உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் வரலாறு சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.
10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். அரசின் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் செல்லாது என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை. பேரவையில் மீண்டும் நிறைவேற்றி மசோதாவை அனுப்பிய நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் வழங்குவது, ஒப்புதலை நிறுத்திவைப்பது உள்ளிட்ட பிரிவுகளை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என கூறியுள்ள உச்ச்நீதிமன்றம், அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி உத்தரவை ரத்து செய்ததுடன், உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி, குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விவரம்:-
1) சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
2) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா
3) தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
4) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
5) தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா
6) தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
7) தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
8) தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா
9) அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
10) அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா
மேலே உள்ள 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், இந்த மசோதாக்கள் உடடினயாக அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, இனிமேல் இந்த பல்கலைக்கழக வேந்ததராக மாநில முதல்வரே இருப்பார்.