டில்லி:
தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
தமிழக்ததில் நடைபெற்றுவரும் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தே.மு.தி.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அவர் தனது மனுவில், “உச்ச நீதிமன்றதீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சியினர் திட்டமிட்டுள்ளார்கள் இதற்கு தடை விதிக்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும், தமிழக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், தமிழக பாடத்திட்டத்தை சிபிஎஸ்ஈக்கு இணையாக மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
விசாரணைக்குப் பிறகு, “வகுப்பு புறக்கணிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் எடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், “எந்தவொரு அமைப்போ கட்சியோ நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடக்கூடாது ” என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆக, போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.