டில்லி

ல்வி, மற்றும் பணியில் சேருவதற்காக போலி சாதிச் சான்றிதழ் கொடுப்போரின் பட்டம், வேலை ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் சேரவும், பணியில் அமரவும் சாதிச் சான்றிதழை போலியாக தயாரித்து அதனை பலர் கொடுத்துள்ளனர்.  இது குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில்,  அவ்வாறு பட்டம் பெற்ற நபர்களிடம் இருந்து பட்டம் பறிக்கப்படும் எனவும் பணி புரிவோர் எத்தனை வருடம் பணி புரிந்திருந்தாலும் உடனடியாக பணிநீக்கம் செய்யப் படுவார்கள் எனவும் கூறி உள்ளது.  இது தவிர தண்டனையும் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.

இதே அறிவிப்பை மத்திய அரசும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.  மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்த தகவலின் படி, 1832 பேர் .போலி சான்றிதழைக் காட்டி பணியில் அமர்ந்துள்ளதாக தெரிய வருகிறது.  இதில் 276 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், 521 பேருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதாகவும், மீதமுள்ளோர் மீது இனிமேல் தான் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த தகவலில் சொல்லப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளில் மட்டும் அல்ல, பல வங்கிகளிலும் போலி சான்றிதழின் அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளன என்பது வேதனை தரும் விஷயம்