டெல்லி: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சட்டத்தின்படி, 24வாரம் வரையிலான கருவை கலைக்க மட்டுமே  உத்தரவிட முடியும் என்ற நிலையில், சிறுமியின் நிலை கருதி உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கர்ப்பம் தரித்த 14 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரி சிறுமியின் தாயார் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போது, மும்பை உயர்நீதிமன்றம் கருவை கலைக்க உத்தரவிட முடியாது என்று மறுத்த நிலையில், சிறுமியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூடு தலைமையிலான அமர்வு, சிறுமியின் கருவை கலைக்க அனுமதி அளத்து உத்தரவிட்டது.

கருக்கலைப்பு சட்டத்தின் படி, 24 வாரம் வரை மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி இருப்பதாகக் கூறி மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையில், சிறுமியின் நலனைக் கருத்தில் கொண்டு 28 வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு  அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

முன்னதாக, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தனது 14 வயது மகளின் 28 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீபிததி,  14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உத்தரவிட முடியாது என அனுமதி மறுத்தது.

கரு  முற்றிய நிலையில் இருப்பதாலும்,  கருவை கலைத்தால் முழு வளர்ச்சியடைந்த கரு பிறக்கும் என்று கூறி பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பத்தை கலைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மருத்துவக் கருத்தரிப்புச் சட்டத்தின் (இந்தியாவில் கருக்கலைப்பைக் கட்டுப்படுத்தும் சட்டம்) படி, 24 வாரங்களுக்கு மேல் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றத்தின் அனுமதி தேவைப்படும். அதன்படி அனுமதி கோரப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து  மனுவை ஏப்ரல் 4ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19ந்தேதி) விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்தது,  மேலும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்து திங்கட்கிழமைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மும்பை மருத்துவமனைக்கு  உத்தரவிட்டது. அறிக்கையை, மின்னஞ்சல் மூலம் அவசரமாக அனுப்பும்படியும்  குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, சிறுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  பாதிக்கப்பட்ட சிறுமியை  பரிசோதிக்காமல் மருத்துவ தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டதுடன், எதிர்காலம் கருதி சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பில், மருத்துவ அறிக்கையில், மைனர் மீதான கர்ப்பத்தின் உடல் மற்றும் மன நிலையின் தாக்கம் மற்றும் கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் பின்னணி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை குறிப்பிடப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது. மேலும், சிறுமியின் நிலையை கருதி, அவரது 28வார கருவை கலைக்க உத்தரவிட்டது.

மருத்துவமனை சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொண்டு, மைனரை மருத்துவ ரீதியாக நிறுத்துவது குறித்து கருத்து தெரிவித்தது மற்றும் கர்ப்பம் தொடர்ந்தால், அந்த மைனரின் உடல் மற்றும் மன நலனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியது.

மேலும், உடனே  சிறுமியையும் அவரது தாயையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுமாறு மகாராஷ்டிரா அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சிறுமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாமல் கர்ப்பத்தை கலைக்க முடியுமா என்பதை மருத்துவ வாரியம் முடிவு செய்யும் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூடு உத்தரவிட்டார்.