சென்னை
ஊரடங்கில் விவசாயிகள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலை மேம்பட ஊரடங்கிற்குப் பிறகு சிறுவிவசாயிகளிடமே காய், கனி உள்ளிட்டவைகளை வாங்குங்கள் என நடிகை காஜல் அகர்வால் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சிறு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களிடம் தேவையான பொருட்களை வாங்குங்கள், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அதுவே நல்ல வழி. மேலும் இனி இந்தியப் பொருட்களையே வாங்கும்படியும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
காஜல் அகர்வால் தற்போது கமலுடன் இந்தியன் 2 படித்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அதன் படப்பிடிப்பு நிறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் பாரிஸ் பாரிஸ் படத்தின் வெளியீட்டை காஜல் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்.
[youtube-feed feed=1]