சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்க மறுக்கப்பட்டதால், அங்கிருந்து விலகிய மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளார்.

2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கியவர் தமிமுன் அன்சாரி. இவர்  அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து, சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்.  இரட்டை இலைசின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வருகிறார். ஆனால், எடப்பாடி தலைமைய அரசு, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிமுன் அன்சாரிக்கு, தற்போது எந்தவொரு தொகுதியும் ஒதுக்க அதிமுக தலைமை மறுத்து விட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக அணியில் இருந்து விலகி, திமுக அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.

ஆனால், திமுக கூட்டணியிலும், தமிமுன் அன்சாரிக்கு இடம் ஒதுக்க மறுத்துவிட்டதால், ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில், தற்போது மீண்டும், திமுக கூட்டணிக்கே தனது மனித நேயக ஜனநாயக கட்சியின்  ஆதரவு என தெரிவித்து உள்ளார்.

தனது கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தொகுதிகள் கிடைக்காதது வருத்தம்தான் என்றவர்,  10ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.