சூப்பர் டீலக்ஸ் படத்தில், நடிகைகள் நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளதாக சமந்தா கூறியுள்ளார் .
சமந்தா கூறுகையில், இப்படத்தில் நான் ஃபஹத் ஃபாசிலின் மனைவியாக நடித்துள்ளேன். 2 நடிகைகளின் நிராகரிப்பிற்கு பின்னரே இந்த கேரக்டர் என்னை தேடிவந்துள்ளது. படம் ரிலீஸ் ஆனதும் எனது கேரக்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் எழக்கூடும்.
இப்படம் விருதுபெறும் பட்சத்தில், அதன் ஒட்டுமொத்த பெருமையும் இயக்குநர் குமாரராஜவையே சேரும். ஏனெனில், அவர் இயக்கத்தில் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘ஆரண்ய காண்டம்’ படம் இன்றளவும் பேசப்படுவதே அதற்கு சான்றாகும் என கூறியுள்ளார்.