நீலப்பட நடிகையான சன்னி லியோன், தொலைக்காட்சி படப்பிடிப்பில் பங்கேற்க கேரளா வந்துள்ளார்.

கடவுளின் பூமியை சுற்றிப்பார்க்க, தனது குடும்பத்தையும் அழைத்து வந்து திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளார்.

சன்னி லியோன் மீது, கொச்சி போலீசில் ஷியாஸ் என்பவர் ஒரு புகார் அளித்தார்.

“இரு ஆண்டுகளுக்கு முன்னர், கொச்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சன்னியிடம் 29 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர் நிகழ்ச்சிக்கு வராமல் ஏமாற்றி விட்டார்” என புகாரில் அவர் கூறி இருந்தார்.

இதனால் நடிகை தங்கி உள்ள விடுதிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் சன்னி லியோன் “நான் எந்த தவறும் செய்யவில்லை. நிகழ்ச்சி தேதியை ஏற்பாட்டாளர்கள் பலமுறை தள்ளி வைத்தனர். தவிர எனக்கு பேசிய படி, பணம் கொடுக்க வில்லை.12 லட்சம் மட்டுமே தந்தனர். ஆனால் வேண்டுமென்றே என் மீது அவதூறு பரப்புகிறார்கள்” என புலம்பினார்.

இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]