காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.

அவரது பதவிக்காலம் வரும் 15 ஆம் தேதியுடன் முடிகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தால் தான், ராஜ்யசபாவுக்கு உறுப்பினரை தேர்வு செய்ய இயலும்.

கேரளாவில் வரும் ஏப்ரல் மாதம் 3 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிகிறது.

அப்போது மூன்று எம்.பி.க்களை புதிதாக தேர்வு செய்ய தேர்தல் நடக்கும்.

கேரளாவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், ஒரு எம்.பி. தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெறும்.

அந்த இடத்துக்கு குலாம் நபி ஆசாத்தை போட்டியிட வைத்து மீண்டும், ராஜ்யசபா எம்.பி.யாக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

– பா. பாரதி