ஆபாச சினிமா நடிகையான சன்னி லியோன், சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘பெந்த் ஹவுஸ்’ என்ற இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து, தனது பொதுவாழ்க்கையை ஆரம்பித்தார்.
21 வயதில் ஆபாச சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான ‘மதுரராஜா’ படத்தில் ‘மோக மந்திரி’ என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியதால், சன்னி, கேரளாவிலும் பிரசித்தம்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரியாலிட்டி ஷோ’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள சன்னி திருவனந்தபுரம் வந்துள்ளார்.
அங்குள்ள தனியார் ஓய்வு விடுதியில் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன், கொரோனா விதிகளை கடை பிடிக்கும் வகையில் தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.
தனிமைக்காலம் முடிந்ததும், ஷுட்டிங்கில் கலந்து கொள்வார், சன்னி லியோன்.
– பா. பாரதி