நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா நடிக்கும் ஒரு திகில் காமெடி திரைப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் தயாரிக்கின்றனர்.

இப்படத்தை யுவன் இயக்குகிறார். ஜாவித் இசையமைக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் ஜி.பி.முத்து நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஓ.எம்.ஜி (ஓ மை கோஸ்ட்) எனப் பெயரிட்டுள்ளனர்.