இயக்குனர் யுவனின் வரலாற்று திகில்-காமெடி படமான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
நடிகை சன்னி லியோன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ராணி மாதிரியான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

கவர்ச்சியாகவும் அதே சமயம் சிறப்பாகவும் தோற்றமளிக்கக்கூடிய நபரை தேடிக்கொண்டிருந்த இயக்குனர் அதற்கு சன்னி லியோன் தான் சரியான தேர்வு என்று முடிவுசெய்ததாக தெரிகிறது.
சதீஷ், தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுனன் மற்றும் தங்க துரை ஆகியோர் நடிக்கும் இப்படத்தை VAU மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் டி. வீர சக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel