வாஷிங்டன்

மூன்றாம் முறையாக அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்துக்கு சென்றுள்ளார்.

ஏற்கனவே 2 முறை அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 58 வயதான சுனிதா விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார்.  நேற்று முன் தினம் இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக நேற்று முன்தினம் விண்வெளிக்குச் சென்றார். அவருடன் அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் சென்றார்.

பலமுறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போயிங் நிறுவனத்தின் ‘ஸ்டார்லைனர்’ விண்கலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

சுனிதா வில்லியம்ஸ் 25 மணி நேர பயணத்திற்குப் பிறகு  வெற்றிகரமாக 3-வது முறையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். அவர் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணி அளவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுள்ளார்.

அவர்கள் சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூன் 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார்கள். 3-வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றுள்ள சுனிதா, தன்னுடன் விநாயகர் சிலை மற்றும் பகவத் கீதையை கொண்டு சென்றுள்ளார்.