நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில்  கடந்த 9 மாதங்களாக சிகிச்சி தவிரத்த சுனிதா வில்லியம்ஸ் நாளை  பூமிக்கு திரும்புகிறார்  என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்து உள்ளது.

அதன்படி,  விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நாளை பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், அவர்கள் அங்கு சிறு பணிகளை முடித்து விட்டு அடுத்த 8 நாளில் பூமிக்கு திரும்பி விடுவார்கள் என நாசா  அறிவித்தது. ஆனால், அவர்கள் சென்ற விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவர்கள் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.  அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்ய முடியாத நிலையில், அந்த விண்கலத்தை மட்டும், நாசா பத்திரமாக தரையிறக்கியது.

இதையடுத்து, விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்து வந்த, சுனிதா வில்லியம்ஸ் குரூப் பூமிக்கு வருவதில் தொடர்ந்து சிக்கல் காணப்பட்டது. அவர்கள் அன்று முதல் இன்றுவரை சுமார்  9 மாதங்களாக ஆகிவிட்டது. இதனால் அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கித் தவிக்கும் சூழல் உருவானது.‘

இதற்கிடையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அதிபர் டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ்-ஐ பூமிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். அதன்படி, பிரபல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான எலன் மஸ்க்கின் ஸ்பஸ்எக்ஸ் நிறவனத்துடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் கேப்சூல் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விண்கலம் நேற்று  வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தது. அதைத்தொடர்ந்து அந்த விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புகின்றனர். இருவரும்  நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,  ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் ஹேட்ச்  அங்கிருந்து புறப்பட்டு,  நாளை (மார்ச் 18ந்தேதி) அமெரிக்க நேரப்படி மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த ஒரு ஜோடி அமெரிக்க விண்வெளி வீரர்கள் திரும்புவது குறித்த ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) ஞாயிற்றுக்கிழமை, இருவரும் மார்ச் 18 செவ்வாய்க்கிழமை மாலை (GMT) பூமிக்குத் திரும்புவார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.