டில்லி

சுனில் அரோரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் அரோரா (வயது 61) தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்ற மாதம் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஸைதி ஓய்வு பெற்றதை முன்னிட்டு, அசல்குமார் ஜோதி தலைமை தேர்தல் ஆணையராகவும், ஓம்பிரகாஷ் ராவத் தேர்தல் ஆணையராகவும் பொறுப்பு வகித்து வந்தனர்.  சுனில் அரோரா பொறுப்பேற்க்கும் நாளில் இருந்து அவர் பதவிக்காலம் துவங்கும் என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுனில் அரோரா 1980ஆம் வருடம் ராஜஸ்தானில் ஐ ஏ எஸ் பட்டம் பெற்றார்.  நிதித்துறை, ஜவுளித்துறை, பிளானிங்க் கமிஷன் ஆகிய துறைகளில் பணி புரிந்துள்ளார்.  தோல்பூர், ஆல்வார், நாகவுர், ஜோத்பூர் ஆகிய ராஜஸ்தான் மாவட்டங்களில் ஆட்சியாளராக பணி புரிந்துள்ளார்.  1993-98 வரை ராஜஸ்தான் முதல்வரின் காரியதரிசியாக பணி புரிந்துள்ளார்.  2005-08 வரை ராஜஸ்தான் முதல்வரின் தலைமை காரியதரிசி பொறுப்பை வகித்துள்ளார்.  இது தவிர ராஜஸ்தான் மாநிலத்திலும், மத்திய அரசிலும் பல பதவிகளை வகித்துள்ளார்.