நிலைத்து நின்று ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் இந்திய ஜோடி – ஷர்துல் & சுந்தர் அரைசதம்

Must read

பிரிஸ்பேன்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், அரைசதத்தை நெருங்கிவரும் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகுர் இருவரும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டி வருகின்றனர். இருவருமே அரைசதம் அடித்துள்ளனர்.

இந்தியாவின் முக்கிய முன்னணி பேட்ஸ்மென்கள் யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சொதப்பிய நிலையில், இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்பதற்கு போராடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து, ஆஸ்திரேலியாவின் ரன் முன்னணியை 100க்குள் கொண்டு வந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், 108 பந்துகளை சந்தித்துள்ள சுந்தர் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எடுத்துள்ளார். ஆனால், சற்று அதிரடியாக ஆடும் ஷர்துலோ, 92 பந்துகளை சந்தித்து, 2 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகளுடன் 54 ரன்கள‍ை அடித்துள்ளார்.

இவர்கள் நிலைத்து நின்று, பெரிய ரன்கள் அடிக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவின் எண்ணிக்கையை இந்தியா தொடும் என்பதில் சந்தேகமில்லை.

 

More articles

Latest article