இரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்

Must read

மெல்போர்ன்: இந்தியா & ஆஸ்திரேலிய அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை, தற்போதைய டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளது என்று கருத்து கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல்.

அவர் கூறியுள்ளதாவது, “இரு அணிகளின் பலவீனமான பேட்டிங் வரிசை, டெஸ்ட் தொடரை ஆர்வமூட்டக்கூடியதாக மாற்றியுள்ளது. எந்த அணியும் ஒன்றின்மேல் ஒன்று பெரியளவில் ஆதிக்கம் செலுத்தும் சூழல் இல்லை.

இந்திய அணியின் போராடும் குணம் பெரியளவில் ஆச்சர்யமூட்டுகிறது. அவர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சு பணிந்து விடுபவர்களாய் இல்லை. அதேசமயம், இந்திய பேட்ஸ்மென்கள் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்பவர்கள் என்று கூறிவிட முடியாது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தகுதிபெற்றால், அது உலகின் மிகச்சிறந்த போட்டியாக அமையும்” என்றுள்ளார் சேப்பல்.

 

More articles

Latest article