டில்லி

ந்த ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இந்தியாவில் மார்ச் தொடங்கும் கோடை காலம் ஜூலை வரை நீடிப்பது வழக்கம்.   இந்த காலங்களில் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீச்சு என்பது சகஜமான நிகழ்வாகும்.   இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வெயில் எப்படி இருக்கும் என ஆய்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்த ஆண்டு டில்லி, அரியானா, பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்கமான வெயிலை விட குறைந்த பட்சம் 1 டிகிரி செல்சியஸும்,  அதிகபட்சம் 5 டிகிரி செல்சியஸும் அதிகமாக இருக்கும்.   மேலும் இந்த வெப்பம் அதிகரிப்பு என்பது மலைப் பகுதிகளான இமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களிலும் 3 டிகிரி வரை இருக்க வாய்புள்ளது.    தென்னிந்திய மாநிலங்களிலும் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் வெப்ப நிலை வழக்கத்தை விட அதிகரிக்கும்”  என குறிப்பிடப்படுள்ளது