சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் 30ந்தேதி வரை பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், ஏற்கனவே 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இடைநிலை பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டிறுதி தேர்வுகள் முடிவடைந்துள்ளன. தற்போது நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த தேர்வுகள் வரும் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாவதாகவும், கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முந்தாலும், . விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
