புதுடெல்லி: இந்திய விவசாயிகளின் கோடைகால பயிரிடும் செயல்பாடு ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருவதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 9% அளவிற்கு குறைந்து வருகிறதாம்.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; பொதுவாக, பருவமழையை எதிர்பார்த்து இந்திய விவசாயிகள் கோடைகால பயிரிடுதலைத் தொடங்குவார்கள். ஆனால், இந்தமுறை கடந்தாண்டை ஒப்பிடுகையில் அளவு குறைந்துள்ளது.
* கடந்தாண்டு கோடையில் 11 மில்லியன் ஹெக்டேர் பயிரிடப்பட்ட நெற்பயிர், இந்தாண்டு 9.8 மில்லியன் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.
* கடந்தமுறை 4.1 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை.
* மேலும், கடந்தாண்டு பருத்தி பயிரிடப்பட்ட 7.8 மில்லியனில் எந்த மாற்றமும் இல்லை.
* அதேசமயம், சோயாபீன்ஸ் கடந்தாண்டு 6.4 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நிலையில், இந்தாண்டு 5.2 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு மட்டுமே பயிரிடப்படுகிறது.
* மேலும் பருப்பு வகைகள் மற்றும் கரும்பு ஆகியவற்றின் பயிரிடும் அளவும் குறைந்துள்ளது.
இவ்வாறு மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.