இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் சுக்ராம் மகன் பாரதியஜனாவுக்கு தாவியுள்ளார். இதைடுத்து, பாரதிய ஜனதா சார்பாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார்.
இமாச்சல பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ந்தேதியுடன் ஆட்சி நிறைவுபெறுகிறது.
இதையடுத்து, இமாச்சல பிரதேசத்தில் இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 18ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் கடந்த 12ந்தேதி அறிவித்தது.
இதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசியல் மாற்றங்கள், கட்சி மாறுதல்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், இமாச்சல காங்கிரஸ் தலைவரான சுக்ராமின் மகன், 60வயதான அனில் சர்மா காங்கிரசில் இருந்து விலகி பாரதியஜனதாவில் இணைந்துள்ளார்.
நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசின்போது, சுக்ராம் தொலைதொடர்பு அமைச்சராக இருந்தார். 1996ம் ஆண்டு, அவரது சூட்கேசில் இருந்து ரூ.3.6 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது டெலிகாம் சலுகைகள் வழங்க அவர் பெற்ற லஞ்சம் என தெரியவந்தது. மேலும் இவர்மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளது.
இந்நிலையில் நேற்று, சுக் ராமின் 61 வயதான மகன் அனில் சர்மா, தனது 90 வயதான தந்தை சுக்ராமுன் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இல் சேர்ந்தார். இதைத்தொடர்ந்சு சர்மாவுக்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்று பாரதியஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாம், சர்மா பாரதியஜனதாவில் சேர்ந்தது குறித்து பிஜேபி மக்களவை உறுப்பினர் அனுராக் தாக்கூர் வரவேற்பு தெரிவித்து டுவிட்டு செய்துள்ளார். அதில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் நரேந்திரி மோடியின் புதிய இந்தியாவை உருவாக்க இணைந்து செய்லபடுவோம் என்று கூறி உள்ளார்.
மேலும், தன்மீதுள்ள ஊழல் தொடர்பான வழக்குகளைச் சமாளிக்க காங்கிரஸ் முதல்வர் வீரபத்ர சிங் முயற்சி செய்து வருகிறார் என்றும்பா .ஜ.க வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடவில்லை என்றும் கூறி உள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இமாச்சல மாநில முதல்வர் வீரபத்ரசிங், காங்கிரஸில் இருந்து தந்தை-மகன் இருவரும் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் த்ங்கள் விசுவாசத்தை பாஜகவில் காட்டட்டும் என்றும் கூறினார்.