ந்த காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கியது பீஹார். இந்த மாநிலத்தில்தான் புகழ் பெற்ற நாளந்தா பல்கலை இருக்கிறது.
ஆனால் அதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.  சமீபத்தில் இம் மாநிலத்தில் நடந்த தேர்வு ஒன்றின் போது, பக்கவாட்டு ஜன்னல்கள் வழியாக தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு “பிட்” களை கொடுத்த குடும்பத்தினர் படம் மிகவும் புகழ் பெற்றது.
சமீபத்தில் வெளியான +2 முடிவுகள் வெளியான போதும், மாணவர்கள் தரம் குறித்து சர்ச்சைகள் கிளம்பின. மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்கள், குறிப்பிட்ட பாடங்களில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களிடம் தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டி கண்டனர்.
gujarat
அப்போதுதான் அந்த மாணவர்களுக்கு அடிப்படை விசயங்களே தெரியவில்லை என்பது வெளிப்பட்டது.
முதலிடம் பிடித்த மாணவி ரூபிராய் 500க்கு 444 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் அவர் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியதாக தெரிவித்தார். அதாவது, தான் எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினோம் என்பதே அவருக்குத் தெரியவலில்லை.
அது மட்டுமல்ல.. அவரிடம் “அடுத்து என்ன படிக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டபோது ‘பொலிடிக்கல் சயின்ஸ்’ என்பதற்கு பதிலாக ‘புரொடிகல் சயின்ஸ்’ என்று கூறினார். அதுமட்டுமல்ல..  அது சமையல் கலை பற்றியது என்று அவர் கூறியதும் அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அடுத்து, அறிவியல் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர் சவுரப் குமாரிடம் பேசினர், தொலைக்காட்சி நிருபர்கள். அப்போதுதான் சவுரப்புக்கு எலெக்டிரான், புரோட்டான் என்றால் என்ன என்பதே  தெரியவில்லை.
இவரிடம் மேலும் கேட்டபோது, “என்னிடம் ஏதும் கேள்விகளைக்கேட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று மிரட்டல் விடுத்தார். இவர், கடந்த (2015ம்) வருடம், சி.பி.எஸ்.இ. தேர்வில் தோல்வி அடைந்தவர் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இப்போது, அம் மாநில கல்வி அமைச்சர் அசோக் சவுத்ரி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.  முக்கிய பாடப்பிரிவுகளில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களின் விடைத்தாள்கள் வல்லுனர் குழுவை கொண்டு ஆய்வு செய்வதுடன் அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
என்னத்த சொல்றது..!