திண்டுக்கல்,

ந்துவட்டி கொடுமையால் பெண்மணி ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, அவரது கணவர் தனது கறுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றது திண்டுக்கல் மாவட்டத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் வசித்துவருகிறார்கள் கேவசன் – காயத்ரி தம்பதியினர். கேசவன், சொந்தத் தொழில் துவங்க கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்.

தொழிலில் நட்டம் ஏற்படவே கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். இதற்கிடையே வாங்கிய பணத்துக்கு பெரும் பணம் கேட்டு கந்துவட்டி நபர்கள் மிரட்டியதாகவும் அதனால் தம்பதியினர் விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை காயத்ரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கேசவன் தனது கத்தியால், தனது கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

கந்துவட்டிக்கொடுமையால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கந்துவட்டி தற்கொலைகள் தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]