போபால்

டந்த பத்தாண்டுகளில் மத்திய பிரதேசத்தில் வேலியில்லா திண்டாட்டத்தால் தற்கொலைகள் 2000% பெருகி உள்ளன.

வேலையில்லா திண்டாட்டத்தால் தற்கொலைகள் செய்துக் கொள்வது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.    இது குறித்து தேசிய குற்றவியல் பதிவு மையம் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் தற்கொலைகள்நிகழ்வதாக தெரிவித்துள்ளது.   இதையொட்டி பெரோச்கர் சேனா என்னும் மத்தியப் பிரதேச மாநில  தன்னாய்வு அமைப்பு ஒரு ஆய்வை நடத்தி உள்ளது.   அந்த ஆய்வின் முடிவுகளை தற்போது அதன் தலைவர் அக்‌ஷய் ஹுன்கா அறிவித்துள்ளார்.

அந்த ஆய்வு முடிவில், “வேலை இல்லாத திண்டாட்டம் என்பது நம் நாட்டில் மட்டுமின்றி உலகளாவிய ஒரு பிரச்னையாக உள்ளது.   ஆனால் இதனால் தற்கொலை செய்துக் கொள்பவர்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர்.  அதிலும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கடந்த 2005 – 2015 வரையிலான பத்து ஆண்டுகளில் இவ்வகை தற்கொலைகள் 2000% அதிகரித்துள்ளன.

கடந்த 2005 ஆம் ஆண்டில் 29 ஆக இருந்த எண்ணிக்கை 2015 ஆம் வருடம் 579 ஐ எட்டி உள்ளது.  வேலை இல்லா மாநிலங்களில் 13ஆம் இடத்தை பெற்றுள்ள மத்திய பிரதேசம் வேலையில்லா திண்டாட்டத்தினால் தற்கொலை செய்துக் கொள்வோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது”  என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ம. பி.  மாநில வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா, “அந்த அறிக்கையில் கூறப்பட்டது போல வேலை இல்லா திண்டாட்டம் உலகளாவிய பிரச்னை ஆகும்.   இந்த மாநில அரசு அதை போக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.   அதானால் தான் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக இருந்த ம. பி.  தற்போது முன்னேறி 13ஆம் இடத்துக்கு வந்துள்ளது.   ஆனால் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுபவர்கள் பற்றி ஆராய்ந்தால் அவர்களின் தற்கொலைக்கான காரணம் வேறு ஏதாவதாக இருக்கக் கூடும்.  அதனால் நான் இதை அதிகம் ஆராய விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.