சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார், அவருடன் திமுக முக்கிய தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்த தகவல் பரபரபபானது. ஆனால், புத்தாண்டு தினத்தையொட்டி, அவர்கள் மரியாதை செய்ததாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், புத்தாண்டு தினமான இன்று ஸ்டாலின் குடும்பத்தினர், திமுக தலைவர் கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செய்தனர்.
வழக்கமாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருக்கும்போது, புத்தாண்டின் முதல் நாள், பொங்கல் திருநாள் போன்ற நேரங்களில், தன்னை சந்தித்து வாழ்த்து பெறும் குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்துவார். அதன் நினைவாக, அவர் மறைந்தப்பின் அவரது சமாதிக்கு செல்வதை திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கமாக வைத்துள்ளார்.
அதுபோல, இந்த ஆண்டும், இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அ.ராசா உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகள் வந்தனர், ஸ்டாலின் மனைவி துர்காவும் அவருடன் வந்திருந்தார்.
கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.