இரவு பதினோரு மணிக்கு வருகிறேன் என்று வாட்ஸ்அப் செய்தி அனுப்பியிருந்தார் நியூஸ்பாண்ட்.
வரும்போதே முகத்தில் சோகம் அப்பியிருந்தது.
“மறைந்த பாடலாசிரியரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு திரும்பினேன்” என்றார்.
நாம் எதுவும் பேசவில்லை.
அஞ்சலியைப் போல், இடைவெளியை மௌனம் நிரப்பியது.
சில நிமிட அமைத்திக்குப் பிறகு நியூஸ்பாண்ட் பேச ஆரம்பித்தார்:
“இளவயது மரணம்.. அதுவும் மதுவினால் என்கிற போது, மனம் மிகவும் கனத்துப்போகிறது.
பாடலாசிரியரின் மதுப்பழக்கத்துக்கும்… மறைவுக்கும், திரைத்துறையினர் சிலரும் காரணம். இரவு நேரத்தில் மட்டும் மது அருந்தி வந்த அவர், ஒரு கட்டத்தில் மாலை, மதியம் என்று இறங்கி, காலை முதல் போதையில் இருக்க ஆரம்பித்தார். சில விழாக்களுக்குக்கூட தள்ளாடியபடி வந்தார்.
அதீத மது என்பதையாவது அவரது நண்பர்கள் கண்டித்திருக்கலாம். ஆனால் சில விழாக்களில், பாடலாசிரியரின் மதுப்பழக்கத்தை சிலாகித்து மேடையிலேயே சிலர் பேசியிருக்கிறார்கள்.
“உங்க பாட்டு வேண்டும் என்று கவிஞரிடம் சொன்னால், உடனே  ஈ.சி.ஆர். ரோடில் கார் பாயும். சுச்சுவேசனை சொன்னால் போதும், ஒரு கையில் மதுக்கோப்பையும், இன்னொரு கையில் பேப்பர் பேனாவுமாக பாடல்களை எழுத ஆரம்பித்துவிடுவார்” என்றெல்லாம் புகழ்ச்சி போல் அதை சொல்லியிருக்கிறார்கள்!”
“ப்ச்.. திறமையான பாடலாசிரியர்.. அவராவது கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்!” என்றோம் வருத்தத்துடன்.
“அது முடியாத விஷயம். பலரும் நினைப்பது போல, குடிப்பழக்கம் என்பது தானே ஏற்படுத்திக்கொள்வது மட்டுமல்ல. ஒரு கட்டத்துக்கு மேல், அது நோய் என்றாகிவிடுகிறது. ஆகவே அப்பழக்கத்தை நிறுத்த முறையான சிகிச்சையும், தொடர் கட்டுப்பாடும் தேவை” என்ற நியூஸ்பாண்ட், “பல நாட்களுக்கு முன்பே அவருக்கு மஞ்சள் காமாலை என்பது தெரிந்துவிட்டது. பெரிய தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அங்கு பரிசோதித்துவிட்டு, ஈரல் முற்றிலும் கெட்டுப்போய்விட்டது. மாற்றவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு இருபது லட்ச ரூபாய் வரையில் செலவாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் பாடலாசிரியரோ, சித்தவைத்தியம் எடுத்துக்கொள்கிறேன் என்று வீட்டுக்கு வந்துவிட்டார். அதுவும்கூட தவறி்ல்லை.
ஆனால், சித்தவைத்திய சிகிச்சை பெறும் போதும், குடும்பத்துக்குத் தெரியாமல் குடித்துவந்திருக்கிறார். பணியாள் ஒருவர் மூலம் மது வாங்கிவரச் செய்து, வீட்டிற்கு பின்பக்கம் சென்று அருந்திவிடுவாராம்!”
“ஹூம்…!”
“அவரது குடும்பத்தினர் கதறிய கதறல்.. குழந்தைகளின் புரியாத பார்வை.. இதெல்லாம் மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. ஆனால் அங்கும் சிலர் செய்த அலப்பறை இருக்கிறதே அதுதான் கொடுமையிலும் கொடுமை!”
“ஏன்.. என்ன ஆனது..”
“இழவு வீடானாலும், தான்தான் முன்னனியில் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் சிலருக்கு உண்டல்லவா.. அப்படிப்பட்டவர்கள் செய்த நாட்டாண்மைதான்.. விடும்!”
“ம்…”
“இதற்கிடையில், பாடலாசிரியரின் மரணத்தை வைத்து, பிரச்சனையை கிளப்ப சிலர் முற்படுகிறார்கள். அவர் நோயினால் மரணமடையவில்லை.. கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று புரளியை கிளப்புகிறார்கள்!”
“ஹூம்.. இப்படியும் மனிதர்கள்!”
“இன்னொரு கொடுமையும் நேற்று இரவு நடந்தது..!”
“என்ன அது..”
“மறைந்தவருக்கு போட்டியான பாடலாசிரியர்களில் ஒருவர் அவர். “இனி எனக்கு அதிக வாய்ப்பு வரும்” என்று நெருங்கிய நண்பர்களிடம் மகிழ்ந்ததோடு, அவர்களுக்கு  பார்ட்டியும் வைத்திருக்கிறார்.
சென்னை நகரில் இருக்கும் விடுதிகளில் பார்ட்டி வைத்தால் வெளியில் தெரிந்துவிடும் என்பதால், ஈ.சி.ஆர். ரோடில் உள்ள தனது நண்பரின் கெஸ்ட் ஹவுசில் இந்த பார்ட்டி நடந்திருக்கிறது!”
“ச்சீ.. இப்படியும் ஒரு பாடலாசிரியரா? ஒருவரது மரணத்தைக் கொண்டாட மனதும் வருமா?”
பதில் ஏதும் சொல்லாமல்