
சென்னை:
சுப்ரமணியன்சாமியின் கருத்து பாஜகவின் கருத்து அல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலுக்கு ஆளுநர் தாமதப்படுத்துவதுதான் காரணமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ஆளுநர் சரியான முடிவெடுக்க கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், சுப்பிரமணியன்சுவாமியின் பாதை, தமிழக பாஜகவின் பாதையல்ல என்றும் அவரது கருத்தை தமிழக பாஜகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel