டில்லி:

பசுவதை தடை கோரி சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த தனிநபர் மசோதாவை வாபஸ் பெற்றார்.

பசு வதை தடை செய்யக்கோரும் தனிநபர் மசோதாவை ராஜ்யசபாவில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது தீவிர விவாதம் நடந்தது.

அப்போது வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங் பேசுகையில், ‘‘பசு பாதுகாப்புக்கு மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசின் பயணம் அதை நோக்கித்தான் இருக்கிறது. அதனால் இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும்’’ என்றார்.

இதற்கு சுப்பிரமணியன் சாமி பதில் கூறுகையில், ‘‘அரசுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கும் வகையில் மசோதாவை வாபஸ் பெறுகிறேன். பசு வதை தடைக்கு சட்டம் கொண்டு வருவதோடு, பால் கறக்க முடியாத பசுமாடுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.