டில்லி:

சுப்ரமணியன் சுவாமி நிறைய பேசுவார். அவர் பேசும் அனைத்து விஷயங்களும் பாஜக.வின் கருத்தல்ல என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரவித்துள்ளார்.

பணமதிப்பிழப்ப ஓராண்டு குறித்த கருத்தரங்கம் ஏபிபி சார்பில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில் இதை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசுகையில், ‘‘பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பிழப்பால் ராகுல்காந்தி ஏன் அச்சப்படுகிறார்?’’ என்றார்.

சோனியா காந்தி மருமகன் ராபடர் வத்ரா விவகாரம் குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘எங்களது கட்சி காங்கிரஸ் கட்சியை போன்றது கிடையாது. எங்களது அரசாங்கம் எந்த விவகாரத்தையும் சட்டப்படி தான் கையாளுகிறது.

பணமதிப்பிழப்பால் மூடப்பட்ட 3 லட்சம் நிறுவனங்களும் முறைகேடாக செயல்பட்டவை. அந்த நிறுவனங்களிடம் ஆவணங்கள் உண்மையாக இருந்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது’’ என்றார்.