டில்லி:

குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரான ஆமதாபாத்தின் பெயரை, கர்ணாவதி என மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியை பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கிய நகர்களில் ஒன்று அகமதாபாத் ஆகும். இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாகவும் இது திகழ்கிறது. இந் நகரை பாரம்பரிய நகர்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இந்த நகர் முற்காலத்தில் கர்ணாவதி என்று அழைக்கப்பட்டது. மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு கர்ணாவதி என்ற பெயரில் விரைவு தொடர்வண்டியும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் அகமதாபாத் நகரின் பெயரை, கர்ணாவதி என்று மாற்ற வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுவாமி, “அஹமதாபாத் என்ற பெயரை முதல்வராக இருந்து மாற்ற முடியா விட்டாலும், பிரதமராக இருக்கையில் பொருத்தமாக மாற்றலாமே” என்று தெரிவித்துள்ளார்

[youtube-feed feed=1]