சென்னை:
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பேனர் விழுந்ததால், மரணம் அடைந்த இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமாக பேனர் வைத்த ஜெயக்கோபால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுமீதான விசரணையை வரும் 14ந்தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராக இருப்பதால் காலஅவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், விசாரணையை 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்ற அதிமுக பிரமுகரின் இல்லத் திருமணத்தையொட்டி வேளச்சேரி 200 அடி சாலையின் மத்தியில் மற்றும் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட் டன. சம்பவத்தன்று பள்ளிக்கரணையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேனர் ஒன்று, அவர் மீது விழ, அவர் சாலையில் விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர்மீறி ஏறியது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் சென்னை உயர்நீதி மன்றமும்,தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, அப்போது, சட்டவிரோதமாக பேனர் வைக்க மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மேலும் அரசை கடுமையான சாடிய நீதிபதிகள், நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவை யும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. விதிமீறலில் ஈடுபட்ட, வீதிமீறலை தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதை யடுத்து ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர் மேகநாதனும் கைதானார்.
இந்த நிலையில் ஜெயகோபாலன், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையைத் தொடர்ந்து, அரசின் வேண்டுகோளை ஏற்று விசாரணையை 15ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.