’’முட்டியில் ரத்தம் வழிய வழிய சண்டை காட்சியில் நடித்து கொடுத்த ரஜினிகாந்த்’’..

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சினிமா ‘ ஸ்டண்ட் மாஸ்டர்’ களில் ஒருவர் ‘ஸ்டண்ட்’ சில்வா.
ரஜினிகாந்த்துடன், பணி புரிந்த தனது அனுபவத்தை சொல்கிறார், அவர்:
‘’ரஜினி சாருடன், நான் சிவாஜி படத்தில் வேலை பார்த்திருந்தாலும், ஒரு ஸ்டண்ட் டைரக்டராக ‘ 2.0’ படத்தில் அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்துக்குச் சண்டை காட்சி ஒன்றைப் படமாக்கும் போது எதிர்பாராத விதமாக ரஜினி சாரின் கால் முட்டியில் அடிபட்டு விட்டது.
முட்டியில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. எல்லோரும் பதறிப்போனோம்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னேன்.
ஆனால் ரஜினி சாரோ,’ வேண்டாம். ஷுட்டிங்’ தொடர்ந்து நடக்கட்டும்’’ என்று கூறி விட்டார். என்னை இழுத்து ஒரு ஓரமாகக் கொண்டு சென்ற இயக்குநர் ஷங்கர்,’’ என்ன விஷயம்?’ என்று கேட்க, நான் நடந்ததை விளக்கினேன்.
‘’ரஜினி சார் சொல்கிற படி செய்யுங்கள்’’ என கூற, தொடர்ந்து சண்டைக் காட்சியைப் படமாக்கினோம்.
அதன் பிறகே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு சில தையல்கள் போடப்பட்டன.
தொழில் பக்தியில் ரஜினி சாருக்கு நிகர் ரஜினி சார் தான்.
படப்பிடிப்பில், உடன் நடிக்கும் நடிகர்கள், சிறப்பாக நடித்தால், முதல் கை தட்டல் ரஜினி சாரிடம் இருந்து தான் எழும்’’ என்று நெகிழ்கிறார், ‘ஸ்டண்ட் சில்வா.
-பா.பாரதி.
Patrikai.com official YouTube Channel