டில்லி:
வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களை தொடர்புகொள்ள புதிய வசதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.
மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு கட்டமாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை இதற்கான வசதி ஏற்படுத்தி உள்ளது. தூதரக சேவைகள் மேலாண்மை அமைப்பை
(Consular Services Management System) ஏற்படுத்தி அதன் வாயிலாக இணையதளம் மூலம் தங்களை பதிவு செய்துகொண்டால் அவசர காலங்களில் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
(Consular Services Management System) ஏற்படுத்தி அதன் வாயிலாக இணையதளம் மூலம் தங்களை பதிவு செய்துகொண்டால் அவசர காலங்களில் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த வசதியை பெற முதலில் http://www.madad.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று, வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் தங்களது விபரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
“நீங்கள் வெளிநாடுகளில் படிக்கும்போது இந்தியத் தூதரகம்தான் உங்கள் குடும்பம் எனவே உங்களை அவசரகாலங்களில் தொடர்புகொள்ள உடனடியாக இந்த இணையதளத்தில் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த தளத்தில் இணைந்திருக்கும் மாணவர்கள் தங்களுக்கு நேரிடும் பிரச்சனைகளையும் குறைகளையும் தூதரகத்துக்கு தெரியப்படுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இந்தத் தளத்தில் 13432 குறைகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 8332 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.