டில்லி:
சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் டில்லியில் கடந்த 2 நாட்களாக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இதன் காரண மாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இல்லம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்2 பொருளியல், 10வது கணிதம் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மறு தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுடன் பெற்றோர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
டில்லியில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், மற்ற மாநிலங்களுக்கு மறுதேர்வு எதற்கு என்று கேள்வி விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக டில்லியிலும் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
டில்லி குஷாக் சாலையில் (Kushak) உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எந்தநேரத்திலும் பிரகாஷ் ஜவடேகர் வீட்டை முற்றுகையிடலாம் என்பதால்,. போலீசார் 144 தடை விதித்து பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.